
திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார் சிவ வழிபாடு தொன்மைக் காலம் தொட்டு ஈழத்தில் பெற்றிருந்த செல்வாக்கினை இது தெளிவுபடுத்துகிறது. இதுசப்த ஈஸ்வரங்களில் ஒன்றாக இருந்திருக்க கூடும் என ஆய்வாளர் சிலர் குறிப்பிடுவர.; கி.பி 1879- 1882 காலப் பகுதிகளில் இரணைமடுக்குளத்தை அமைப்பது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட போது 1982 ல் இவ்வாலயத்தின் இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. உருத்திரபுரக்குளத்தருகே அழிவுற்றுச் சிதைந்த நிலையில் 19ஆம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட போதும் அக்காலத்தில் இருந்த குடிப்பரம்பலின்மை இவ்வாலயத்தை புனரமைக்க முடியாமைக்கான காரணமாயிற்று ஆயினும் 1949ல் பத்தாம்வாய்க்கால் எனும் உருத்திரபுர குடியேற்றம் இக் கோயிலின் மீளெழுச்சிக்கு காரணமாயிற்று. இவ்வாலயம் இராஜராஜ சோழர் காலத்தினதாக அல்லது அதற்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என சில வராலாற்றாசிரியர்கள் கூறுவார்.
இங்கு கண்டெடுக்கப்பட்டு தற்போது கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்ட நடாராஜர்சிலை தொன்மை இதற்கு சான்றாக அமைகின்றது. அதே போல் இங்கு கண்டெடுக்கப்பட்ட சற்சதுர ஆவுடையார் சோழர்காலக்கலைப்பாரம்பரியதாக போராசிரியர்.ப.புஸ்பரட்ணம் உள்ளிட்டோர் கருதுகின்றனர். 1958 ஆம் ஆண்டு உருத்திரபுரகுளத்திற்கு வடக்கே இருந்த காட்டிற்குள் இவ்விடத்தில் சிதைவு அடைந்த கட்டடங்களும், கருங்கற்களும், கற்றூண்களும் இருக்கக்கண்டு வேலாயுத சுவாமி என்கின்ற திருவாளர் காந்திவேலாயுதப்பிள்ளை என்பவர் தவத்திரு வடிவேல் சுவாமிக்கும் இவ்;வற்புதத்தைத் தெரிவிக்க அவர் அக்காலத்தில் சமயத்தொண்டாற்றிய சன்மார்க்க சபையினருக்குத் தெரியப்படுத்தி காட்டை வெட்டி துப்பரவு செய்தார்.
சிதம்பரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்ததை ஒத்த கற்றூண்களும், கருங்கற்பாறைகளும் இருக்க்கண்டு இவ் விடத்தில் ஒரு சிவனாலயம் இருந்திருக்கலாம் என ஊகித்து அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாகப் பிரசுரிக்கப்பட்டு வந்த ஈழநாட்டுப் பத்திரிகையில் இவ்வாலயம் பற்றி எழுதினார். கிளிநொச்சியைச் சேர்ந்த பல பொரியார்கள் சேர்ந்து குளத்தடி வரை பாதை ஒன்றை ஏற்பாடு செய்து தவத்திரு வடிவேல் சுவாமிகளுடைய ஆசியுடன் உருத்திபுரக்குளக் கட்டினைப் பரிசுத்தமாக்கி புளிய மரத்தடியில் பிரார்த்தனை செய்தனர்.
விநாயகர் பரமசிவனுடய கற்பக்கிரகங்கள் கட்டப்பெற்று குடமுழுக்கு நிகழ்வு மிகச்சுருக்கமாக நடந்தேறியது. ஆதிகாலத்திலேயே இருந்த பொறிக்கடவை அம்பாள் ஆலயத்திலிருந்து ஆவுடையர் பெறப்பட்டது. பிள்ளையார் விக்கிரகம், அம்பாள் விக்கிரகம் ஆகியன இந்தியாவிலிருந்து கலைப்புலவர் நவரத்தினம் அவர்களால் வடித்துக் கொண்டு வரப்பட்டன. அப்போது கீரிமலையைச் சேர்ந்த ஜயப்பிள்ளைக் குருக்கள் குடமுழுக்கை ஆரம்பித்து வைத்தார். அதன் பின்பு அவருடைய சந்ததியினரே ஆலயத்தின் பூசைகளை நடாத்தி வந்துள்ளார். 1958ஆம் ஆண்டு ஆலயத்தின் குடமுழுக்குச் சுருக்கமான முறையில் நடந்தேறியது. ஆலயத்தின் தென்கிழக்குத் திசையில் குளம் ஒன்று உள்ளது. இது உருத்திரபுரபெருங்குளம் என ஆதியிலும் உருத்திரபுரக்குளம் என இக்காலத்திலும் வருகின்றது. சிவன்கோயில் குளம் என அழைக்கப்பட்டதாக தகவல் உண்டு. இக்குளமே சிவலாலயத்தின் தீர்த்தம் ஆகும். இக் குளத்தோடு உள்ள புளிய மரமே தலவிருட்சமாக விளங்குகின்றது.

Leave a Reply