திரு.சிவராசா கருணாகரன்.

Posted on

by


கிளிநொச்சி திருநகரில் வசித்து வரும் இவர் 1963.09.05 ஆந் திகதி சிவராசா சிவபாக்கியம் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது கல்வியை இயக்கச்சி அரசினர் தமிழ்கலவன் பாடசாலை,பளை மகாவித்தியாலயம், ஆகியவற்றில் கற்றார்.


இவர் கலைப்பண்பாட்டுக்கழகத்தின் வெளிச்சம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் தமிழீழத்தேசியதொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.


1980 களின் முற்பகுதியில் இருந்து கவிதை,சிறுகதை,இலக்கியம்,அரசியல்,சமூகவியல்,விமர்சனம் போன்ற துறைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்,ஒரு பயணியின் நிகழ்கால குறிப்புக்கள்,பலியாடு,எதுவுமல்ல எதுவும்,ஒரு பயணியின் போர்கால குறிப்புக்கள்,நெருப்பின் உதிரம்,இரத்தமாகிய இரவும் போன்ற கவிதை நூல்களையும் வேட்டைத்தோப்பு சிறுகதையும், இப்படி ஒரு காலம் என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார்.


நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களையும் நூல் அறிமுக நிகழ்வுகளையும் நடத்தியுள்;ளார்.
பள்ளிக்காலத்தில் இயக்கச்சியில் வசித்த இரத்தினசிங்கம்,பத்மநாதன் ஆகியோரால் வாசிப்பில் ஆர்வம் ஊட்டபட்டார்.இதன் விளைவாக இவரது முதல் கவிதை 1981 இல் தினகரன் பத்திரிகையில் வெளிவந்ததுடன் 1999 இல் முதலாவது கவிதை தொகுப்பு வெளிவந்து பாராட்டு பெற்றது.
இவரது கவிதைகள் ஆங்கிலம்,சிங்களம்,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
இப்படியொரு காலம் கட்டுரைத்தொகுப்பு வன்னி நினைவுகள் என சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.


அன்பின் திசைகள்,எதிர் போன்ற கட்டுரை தொகுப்புக்களும் வெளிவந்ததுடன் அருளப்பட்ட மீன்,இரவின் தூரம்,கடவுள் என்பது துரோகியாய் இருத்தல்,உலகின் முதல் இரகசியம்,படுவான்கரை குறிப்புக்கள்,நினைவின் இறுதிநாள்,நெருப்பின் உதிரம் போன்ற கவிதை தொகுப்புக்கள் இவரது எழுத்துக்கு சான்று.புகைப்படக்காரன் பொய் சொல்வதில்லை இவரது சிறந்த நேர்காணல் பதிவாகும்.


இவரது கலைச்சேவையினை பாராட்டி 2011 கரைச்சி கலாசார பேரவை கரைஎழில் விருதினை வழங்கி கௌரவித்திருந்தது. 2022 பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தென்னங்கீற்று விருது போன்ற அரச திணைக்கள விருதுகளையும் மொழிவிருது,எழுத்துக்கலைஞர் விருது போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *