
சைவ உலகத் தொண்டிலும் இலங்கை அரசியலிலும் தமிழர்களுடைய சைவப்பாரம்பரிய கல்வியை மேம்படுத்துவதிலும் அளப்பரிய தொண்டாற்றியவரும் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் அற்றவராகத் திகழ்ந்த மாமனிதர் சேர். பொன். இராமநாதபுரம் அவர்களுடைய தொடர்புடையது கிளி நகர் கந்தசுவாமி கோவில்.20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிளிநொச்சியூடாகப் புகையிரதப் பாதை அமைத்தல், நெடுஞ்சாலை அமைத்தல் என்பவற்றோடு இரணைமடுக்குளக் கட்டுமானப் பணிகளும் நடந்தன. இரணைமடுக்குளக் கட்டுமானப் பணிகளை முன் நின்று முயற்சித்தவரான சேர்.பொன். இராமநாதன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் பாதையில் கிளிநொச்சியில் ஒரு விடுதி அமைக்க எண்ணினார். ஆதன் மொத்த வடிவமே பழையவைத்தியசாலை நுழைவாயிலுக்கு எதிரே உள்ள விடுதியாகும் யாழில் இருந்து வரும் போது கொழும்பில் இருந்து திரும்பி யாழ் செல்லும்போதும் அவ் விடுதியில் தங்கி குறிப்பாக இப் பகுதி அபிவிருத்தி வேலைகளை குறிப்பாக இரணைமடுக்குள கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்தார் இவர் தங்கும் நாட்களில் இவரைச் சந்தித்த அன்பர்கள் இங்கு ஒரு சைவ ஆலயம் கட்டித் தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
இக் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வந்தது. இதன் பயனாக கிளிநொச்சியில் உள்ள சைவ வழிபாட்டாளருக்குக்கான காணியை அப் போதைய கிராம சேவையாளராகப் பணியாற்றிய உயர் திரு வெற்றிவேலு அவர்கள் தனக்கு இருந்த காணியை ஆலயத்திற்குச் கொடுப்பதற்கு முன்வந்தார் அக் காணியை சைவ அடியார்கள் காடு வெட்டித் துப்பரவு செய்தனர். புின்னர் தற்போது இவ் ஆலயத்தின் களஞ்சிய அறையாக அமைந்துள்ள இடத்தில் ஒரு ஓலைக் கொட்டில் ஒன்று அமைத்து ஒரு வேலாயுத்தை வைத்து வழிபடத் தொடங்கினர். பின்னர் படிப்படியாக ஆலயத்திற்கு நிலையம் எடுத்து அத்திவாாம் போட ஆயத்தமானது இவ் ஆலயம் கிழக்கு வாசலாக அமைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அந்த நேரம் அங்கு வந்த சேர்.பொன். இராமநாதனின் மருமகனாகிய திரு.சு.நடேசபிள்ளை அவர்கள் இவ் ஆலயத்தை காணிக்கு மேற்குப்புறமாக கண்டி வீதி அமைந்துள்ள படியாலும் மூலஸ்தானம் மேற்கு வாயிலாக இருக்கலாம் என்றும் இந்தியாவில் பல ஆலயங்கள் மேற்கு வாயில் அமைந்துள்ளது எனவும் எடுத்துக் கூறி மேற்கு வாயில் கோயிலாக கட்டப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் கிடைத்த தகவலின் படி 20ம் நூற்றாண்டின் தொடக்க காலமாக முதல் கும்பாபிக்ஷேகம் நடைபெற்றிருக்கலாம். இதே வேளை வெற்றிவேலு விதானையாரது தலைமையில் இவ் ஆலயப் பணிகள் நடைபெற்றன. இவர் தொடக்கி வைத்த பணிகளை இவரது மகள் சாந்தநாயகி கந்தையா குடும்பத்தினரால் தொடரப்பட்டது. இதற்குப் பூசகராக பலாலி ஊரைச்சேர்ந்த அதியுயர் பிராமண வம்சத்தைச் சேர்ந்த குமாரசுவாமி சர்மாஅவர்கள் நியமிக்கப்பட்டார். இவரின் விடாமுயற்சியினால் இவ் ஆலயம் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது.

Leave a Reply