கரைச்சி பிரதேசசெயலர் பிரிவின் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் மணியங்குளம் கிராமத்தின் விநாயகர் குடியிருப்பில் அக்கராயன் பங்கின் துணை ஆலயமாக இவ்வாலயம் அமைந்துள்ளது.
2004 இல் இவ்விடத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனும் மக்களின் வேண்டுகோளுக்கமைய அன்றைய பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ஜெயபாலன் OMI அடிகளாரினால் ஆலயம் அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு அத்திவாரமிடப்பட்டது. ஆயினும் உள்நாட்டு யுத்தங்களால் ஆலய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.
2010 மீள்குடியேற்றத்தின் பின் கொட்டில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. 2014 இல் அருட்பணி பற்றிக் OMI அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் ஆலயம் கட்டுவதற்கான அனுமதியும், நிதியுதவியும் யாழ் மறைமாவட்ட ஆயரினால் வழங்கப்பட்டது. சூரியகுமார், மணிமேகலா, யோசுவா, லோஜிதன், மேனுஜா ஆகியோர் ஆலயத்திற்கான முன் கதவு, யன்னல்களுக்கான கிறில் செய்வதற்கான பணத்தை அன்பளிப்பாக வழங்கினர். 2018 இல் அருட்பணி ரெவல் OMI அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்று 12.05.2019 அன்று யாழ் ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆலயம் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

Leave a Reply