
இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேசத்தி வலைப்பாடு கிராமத்தில் பெஞ்சமின்; செபஸ்டியானாள் தம்பதியினருக்கு 1952.01.26 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் பொலிகாப்பியர் என்னும் நாமம் சூட்டினார்கள்.
வலைப்பாடு கிராம மட்டத்தில் முக்கியமாக நன்கு அறியப்பட்ட மூத்த ஆளுமையாகவும் கலைஞராகவும் அறியப்படுகின்றார் பொலிகாப்பியர். நாடகம், ஆடல், பாடல், கூத்து, தெருவெளி நாடகங்கள். கவிதை, கதை முதலிய எழுத்தாக்க நடவடிக்கைகள் அனைத்திலும் வலைப்பாடு கிராம மட்டத்தில் முன்னோடியாக பொலிகாப்பியர் கருதப்படுகின்றார். கிறிஸ்தவ நாடகங்களை திருவிழாக்காலங்களில் தேவாலயங்களில் மேடையேற்றுவதன் மூலம் பூநகரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட பகுதிகளில் நன்கு பிரபலம் பெற்றவராக உள்ளார்.
பராசக்தி. தனிசாம்ராஜ்ஜியம் ஆகிய நாடகங்களிலும் விஜய மனோகரன், தரும பிரகாசம், புனிய அந்தோனியார், கிறிஸ்தவ பாஸ்கு ஆகிய கூத்துக்களிலும் ஆற்றுகை செய்து நீண்ட கால நாடக அனுபவமுள்ள நடிகர் இவராவார். நாடக பிரதியாக்கம் திருந்திய உள்ளம், மனமாற்றம், இறைவழி போன்ற நூல்களை வெறிறிட்டார். இக் கலைஞர் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply