
இலங்கையில் மத்திய மலைப்பிரதேசத்தின் சொந்தமான கண்டிய நகரில் திரு.இராமையா இராஜரட்ணம் அவர்கள் பிறந்தார். உறை பனி போன்ற மலைக்குளிர் மார்கழியில் கூட வீதியிறங்கி பஜனை பாடி இறையோனைத் துதிப்பதில் கழிந்தது இவரது இளமைக்காலம். காலம் காட்டிய வழியில் தம் பிறந்த மண்ணான தெல்தோட்டையை விட்டு கிளி நொச்சியின் ஜெயபுரத்தில் குடியமர்ந்தார். பல பஜனை ;பாடல்களை யும்,கட்டுரைகளையும் எழுதி எழுத்துலகிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஓரே பள்ளியில் பலவித கோலங்களைப் போடுவது இவருக்குக் கை வந்த கலை 2014 தொடக்கம் இன்று வரை பல விதமான புள்ளிக் கோலங்களை அமைத்து பார்ப்போரின் கண்களுக்கும் மனங்களுக்கும் விருந்தளிக்கும் இத்தகைய உன்னத கலைஞனுக்கு 2023ம் ஆண்டில் பூநகரி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் கலைநகரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இத்தகைய கலைத்திறனும் பல்துறைஆற்றலும் கொண்ட இக் கலைஞனின் கலைச்சேவையினை பாராட்டி மாவட்ட கலாசாரப்பேரவையினால் 2024 ம் ஆண்டில் கலைக்கிளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து இக் கலைஞன் தனது கலைச்சேவையினை ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply