
1976 ஆம் ஆண்டு பூநகரிக்கு பிரவேசித்த இவர் பள்ளிக்குடா கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்றார்.இவரது தந்தையார் அண்ணாவியாரும் நடிகரும் ஆவார்.அண்ணாவியார் பரம்பரையில் உதித்த இவர் நாடகம்,நாட்டுக்கூத்து,கவிதை முதலிய துறைகளில் பங்காற்றி வருகின்றார். பாடசாலைக்காலத்தில் ஒருதுளி இரத்தம் எனும் நாடகத்தில் முதல்முதல் நடித்த இவர் நாட்டுக்கூத்துக்களில் பாலசஞ்சுவாம் சேனாதிபதி,கட்டியங்காரன்,பிரபு,வைசூராசன் போன்ற வேடங்களிலும் நடித்துள்ளார்.இவரது கவிதைப்படைப்புக்கள் சங்குநாதம் பத்திரிகையில் வெளிவந்துள்ளன.இவரது ஆறாய்வலி எனும் கவிதை தொகுப்பு பூநகரி கலாசாரப்பேரவையால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இப் பிரதேசத்தின் எழுத்தாளரும் நடிகரும் நாடக இயக்குநரும் என தனிமனித சாதணையாளராகத் திகழ்வதுடன் சமூகம் சார் நற்பணிகளிலும் ஈடுபட்டு சமூகத்தின் நன்மதிப்புப்பெற்று பணியாற்றி வருகின்றார்.இவரது கலைச்சேவையினை பாராட்டி 2016ம் ஆண்டு பூநகரி கலாசாரப்பேரவையினால் கலைநகரி எனும் விருது வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply