ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ( திருநகர் தெற்கு)

Posted on

by

திருநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் கடந்த காலங்களில் 1965 ம் ஆண்டு காலப்பகுதியில் திருமதி அப்பச்சி அன்னபூரணம் அவர்களால் ஆதரிக்கப்பட்டு பூசைகள் செய்தும் பொதுமக்களின் ஆலயமாக மாற்றப்பட்டு அதன்பின்பு நிர்வாகசபை பொதுக்கூட்டங்கள் மூலம் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டு இயங்கிவருகின்றது. பின்பு காலத்திற்கு காலம் இடம்பெயர்வுகள் ஏற்பட்டமையால் சரிவரநடத்த முடியவில்லை இருந்தும் ஆலயப்பூசைகள் நடைபெற்றே வந்தது.

தொடர்ந்தும் அன்னபூரணி அம்மாவின் மகனான திரு அப்பச்சி
வல்லிபுரம் தலைமையில் திருநகர் மக்கள் மட்டுமல்லாது ஏனைய கிராமத்து மக்களும் இணைந்து இவ்வகைய திருப்பணி தொண்டாற்றி வருகின்றனர் அப்பாச்சி வல்லிபுரம் ஒரு சிறந்த தலைவராக திருப்பணி ஆற்றி வந்ததுடன் தொடர்ந்து மக்களால் தலைவராக தொரிவு செய்யப்பட்டு ஆலயத்தினை சிறப்பாக நடாத்தி வந்தார். அதனால் இவ்வாலயம் பாரிய வளர்ச்சி பெற்று திருநகர் பிரதான வீதியில் எழுச்சி பெற்று அன்னை அடியார்களுக்கு அருள்பாலித்து வேண்டும் வரம் வழங்கி வருகிறாள். தென் பின் வல்லிபுரம் அவர்கள் இறைவனடி சேர்ந்த பிறகு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு கோபுர கலசங்கள் அமைக்கப்பட்டு சிறப்பான முறையில் நிர்வாகம் நடத்தி ஆலயத்தினை சிறப்பாக்கியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *