ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஆறாம் ஆண்டு ஆனி மாதம் இருபதாம் திகதி நெடுந்தீவில் பிறந்தார். இளமைக்காலத்தில் கட்டைக்காடு பெரியகுளத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.தனது ஆரம்பக்கல்வியை நெடுந்தீவிலும் பின்னர் இராமநாதபுரம் மகாவித்தியாலயம்,தருமபுரம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடைநிலைக்கல்லியை தொடர்ந்த இவர் க.பொ.த சாதாரணதரம் வரையிலும் கற்றுத்தேறினார். பின் உயர் கல்வியை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கற்றார். பொருளியல் பாடத்தில் இளங்கலைமாணிப்பட்டத்தையும் முதுகலைமாணிப்பட்டத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.
அரச சேவையில் முதற் பணியாக அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி பின்னர்; வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி கருத்திட்டம் (ேநுனுநுீ) திட்டத்தின் திட்டமுகாமைத்துவ நிபுணராகவும் கிளிநொச்சி மாவட்ட பிரதி திட்ட பணிப்பாளராகவும் ஐந்து வருடங்கள் கடமையாற்றினார். பின்னர் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உதவித்திட்டமிடல் பணிப்பாளராக பதவிவகித்து தற்போது பிரதித்திட்டமிடல் பணிப்பானராக கடமையாற்றி வருகின்றார் .
இராமநாதபுரம் பாடசாலையில் தரம் ஆறில் கல்வி கற்கும் போது விபுலானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டிருந்த கவிதைப்போட்டியில் பெற்றமை முதல் எழுத்துத் துறையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக கூறும் இவர் 1978 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டார்.அத்துடன் 2014 ஆம் ஆண்டில் “திட்டமிடலின் மூலதத்துவங்கள்” எனும் திட்டமிடல் துறைசார்ந்த விரிவான அறிவியல் நூல் ஒன்றையும் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கட்டுரை ,கவிதை ,விமர்சனம், மேடைப்பேச்சு ,விவாத அரங்கு எனப்பல துறைகளில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தான் சார்ந்த துறைகளில் கனதியான பங்களிப்பினை வழங்கி வருகின்றார் .
கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்க நிகழ்வுகள் மாவட்ட பண்பாட்டுப் போரவை பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி கண்டாவளை, பஸ்ரீநகரி பிரதேச கலாசாரப் பேரவைகளின் நிகழ்வுகளின் தீர்ப்பாளராகவும் விவாத அரங்குகளின் நடுவராகவும் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் கட்டுரைத் துறையிலும் ஆய்வு கட்டுரைகளை ஆக்குவதிலும் அதிக ஈடுபாடு கொண்ட இவரது ஆய்வுக்கட்டுரைகள் பல மாநாடுகளில் வாசிக்கப்பட்டுள்ளது வடக்கு கிழக்கு மாகாணங்களில் “வளங்களும் வாய்ப்புக்களும் என்ற தலைப்பில் எழுதப்பெற்ற நூல் எழு நா பிரசுரமாக விரைவில் வெளிவர உள்ளது. அத்தோடு இவர் 2024 ஆம் ஆண்டு “மண்”; எனும் கவிதை நூலினையும் வெளியிட்டு இன்றுவரை தனது இலக்கியப்பணியை முன்னெடுத்து வருகின்றார்.
Leave a Reply