இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பூதவராயரை குலதெய்வமாகக் கொண்டு கிராமிய கதிாகாமர் இராமநாதர் பரமபரையால் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு வழிபாடு இடம்பெற்று வந்தது.
1940ஆம் ஆண்டளவில் குறித்த பரம்பரையின் வழிவந்த கதிர்காமர் இராமநாதனால் சிறு கொட்டிலில் அமைக்கப்பட்ட இவ் ஆலயமானது சிமெந்தினால் கற்பக்கிரகம், மகாமண்டபம், பரிவார மூர்த்திகளான ஆதி பிள்ளையார் நாகதம்பிரான் மற்றும் பூதவராயர் போன்றவர்களுக்கான அலயமாக ஆகம விதிப்படி கட்டப்பட்டு கும்பாபிஷேகம் காரைநகரிலிருந்து அழைத்து வரப்பட்டு தண்டாயுதபாணி குருக்களினால் இனிதே நிறைவேற்றப்பட்டிருந்தது.
இக் கோவிலில் பத்து நாட் திருவிழாவும் வெகு வமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. குதிர்காமம் இராமநாதனின் மறைவின் பின்னர் அவரின் மூத்த மகனான இராமநாதன் ஐங்கரநாதனால் கோவல் 1984ல் அவர் மறையும் வரை பரிபாலன சபை உதவியுடன் முகாமை செய்யப்பட்டு வந்தது.
Leave a Reply