திரு.வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை

Posted on

by

யாழ்ப்பாணம் மயிலிட்டியில் 1953.11.05 இல் பிறந்த இவர் தனது தந்தையரான சின்னார் வல்லிபுரம்,கலைக்காவிய நாயகன் வல்லிபுரம் குலசிங்கம் சகோதரனின் அடியொற்றி கலைத்துறையில் ஈடுபட்டுவருகின்றார்.1959 ஆம் ஆண்டிலிருந்து படசாலை காலத்திலே ஆரம்பித்த இக்கலைச்சேவை இன்றுவரை தொடருகிறது.ஜம்பதுக்கும் மேற்பட்ட மாவட்ட,மாகாண,தேசிய சான்றிதழ்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாபூசணம்,(2013)வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் விருது(2014),சிறந்த நூலுக்குரிய வட மாகாணத்தின் சிறந்த இலக்கி விருது.

தேசமான்ய விருது,தேசகீர்த்தி,கலாஜோதி,சாமசிறி.(2013)கிளிநொச்சி மாவட்ட கலைக்கிளி விருது(2012),கரைச்சி பிரதேச செயலகத்த்pன் கரைஎழில் விருது(2011) கிளிநொச்சி தமிழ்சங்கத்தின் கலையரசு(2014) இன்னும் பல கிராம மட்ட அமைப்புக்களின் விருதுகள்.
நடிகன்,பேச்சாளர்,எழுத்தாளர் என அத்தனை துறைகளிலும் மிளிர்ந்து கிளிநொச்சி மண்னுக்கு பெருமை சேர்க்கின்ற ஏழுமலைப்பிள்ளை இந்திய தமிழ் சினிமா படமான தீ படத்தில் நடித்ததுடன் 100 க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளதுடன் சிங்கள வானொலி நாடகங்கள் பலவற்றில் நடித்ததுடன் சிங்கள படங்களிலும் நடித்துள்ளார்.150 க்கு மேற்பட்ட ஆங்கிலத்திறைப்படங்களுக்கு தமிழ் பிரதி எழுதியும் குரல் வழங்கியுள்ளதுடன் தங்கப்பேனாவும் பெற்றுள்ளார்.

இவரது எழுத்து துறைக்கு மகுடபங்கம்,வீரகாவியம்,சதுரங்கவேட்டை,மாவீரன்,சத்திய வேள்வி,ஆணை என அதிகமான வெளியீடுகள் வந்து மாகாண சிறந்த நூல் பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தேசிய ரீதியில் பேச்சு போட்டியில் முதலிடம் பெற்று ஜ.நா நிறுவன பரிசும் சான்றிதழும் பெற்றுள்ளார்.கரைச்சி பிரதேச கலாசார பேரவை உறுப்பினர்,மாவட்ட கலாசார பேரவை உறுப்பினர்,பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கின்றார். தமிழ் இலக்கியப்பரப்பில் 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த கலைஞர்களில் இவரது கலைச்சேவைகள் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *