கிளிநொச்சியில் 1947.12.13 இல் பிறந்த இவர் இலக்கியம்,நாடகம்,நாட்டுக்கூத்து,கிராமியகலைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவராக காணப்பட்டார்.
ஆரம்பக்கல்வி கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை கிளி.இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.
இவரது கலைப்பணியை பாராட்டும் முகமாக கரை எழில்(2015),பிரதேச சபை கலைஞர் கௌரவிப்பு பெற்றார். 45 வருடங்கள் கலைச்சேவையாற்றியிருக்கும் இவர் பாண்டியன் பரிசு,பாஞ்சாலி சபதம்,பண்டாரவன்னியன் போன்ற வரலாற்று நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.சமாதான நீதவானாக இருந்து சேவையாற்றும் இவர் தற்போதும் எழுதி வருகிறார்.
இவரது கலைச்சேவையினை பாராட்டுவதுடன் மாதாந்த உதவுதொகையினை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கி வருகின்றது.திருநகர் வடக்கில் வசித்துவரும் இவர் 1975 கிளிநொச்சி ஆணழகன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.1965 பாண்டியன் பரிசு நாடகத்தில் பெண்ணாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.கலைப்பணி,சமுகப்பணிகள் இன்றும் தொடர்கிறது.மாவட்ட கலாசார பேரவை உறுப்பினர்,பிரதேச கலாசாரப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார்.நவரச பாகங்களை நடிப்பில் காட்டுகின்ற ஒரு நடிகர்.
Leave a Reply