கிளிநொச்சி பரந்தனில் 1954.04.17 இல் பிறந்த இவர் தற்போது வட்டகச்சியில் வசித்து வருகின்றார்.
வாத்தியக்கலைஞர்.கலைக்குடும்பத்தின் வாரிசு. இவரது தந்தையார் கலைஞராக இருந்தபடியால் அவர் வழிவந்த பிள்ளைகளும் கலைத்துறை ஈடுபாடுடையவர்களாக இருக்கின்றனர். வாத்தியக்கலைஞரான இவர் பாடகர்,கிராமிய கலைஞர்,நடிகர் என கிளிநொச்சி மண்ணில் பல்வேறு மேடையேற்றம் கண்டதுடன் மயான காண்டம்,அல்லி அர்ஜினா,பாரிவள்ளல் போன்ற நாடகங்கள் இவருக்கு பேசு பொருளாக அமைந்தது.பிற்பட்ட காலத்தில் ஆர்மோனியம்,ஓகன்,மிருதங்கம் போன்ற வாத்தியக்கருவிகளின் நாதம் அறியப்பட்ட இவர் பல்வேறு இசைக்குழுக்களில் ஆர்மோனியம்,மிருதங்கம்,ஒகன் வாசித்து பாராட்டுக்களையும் கௌரவிப்புக்களையும் பெற்றுள்ளார். பிரதேச மாவட்ட கலை நிகழ்வுகளில் வாத்தியக்கலைஞராக இடம்பெற்றிருக்ககூடிய இவர் இன்றுவரை மாணவரகளுக்கும் இசை வகுப்பினை இலவசமாக வழங்கி வருகின்றார்.
இவரது கலைச்சேவையை பாராட்டு முகமாக கரைச்சி பிரதேச செயலகம் கரை எழில் விருது,(2012) கரைச்சி பிரதேச சபை கலைஞர(;2013)கௌரவிப்பு,கிளிநொச்சி மாவட்டச்செயலகம் கலைக்கிளி விருது (2023) வழங்கி கௌரவித்திருந்தது.கரைச்சி பிரதேச செயலக கலாசார பேரவை உறுப்பினராகும் இருக்கும் உன்னத கலைஞனின் கலைச்சேவைக்;காகவும் நாளாந்த செயற்பாட்டுக்கு உதவியாக மாதாந்த கலைஞர் கொடுப்பனவினை வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கி வருகின்றது.
Leave a Reply