யாழ்ப்பாணம் கச்சாய் தெற்கு,கொடிகாமத்தில் பிறந்த இடமாக கொண்ட இவர் தற்போது திருவையாறில் வசித்து வருகின்றார்.மேடை நாடகங்கள்,இசை நாடகங்கள்,வீதி நாடகங்கள் என பல்வேறு நாடகங்களில் நடித்துவரும் இவர் தற்போது கலாலயம் மன்றத்தினருடன் இணைந்து இன்றும் நாடக கலைஞனாக நடித்து வருகின்றார்.இவரது பேரனார் கந்தையா நாட்டுக்கூத்து அண்ணாவியாவார்.எனவே அவரது வழியில் இவர் கலைப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூசணம்,கரைச்சி பிரதேச செயலக கரைஎழில் விருது,கிளிநொச்சி மாவட்ட கலைக்கிளி விருதுகளை கலைச்சேவைக்காக பெற்றிருக்கும் மூத்த கலைஞர் ஆவார்.
Leave a Reply