கிளிநொச்சி வட்டகச்சியை வசிப்பிடமாக கொண்ட 1990.12.28 ஆந் திகதி பிறந்த நடனத்துறை கலைஞரும் பாடசாலை ஆசிரியருமான இவர் சிவஜானாலய கலைமன்றத்தின் ஊடாக பல்வேறு நடன அரங்கேற்றங்களை செய்து வருகின்றார்.இவரின் மன்றம் மாவட்ட,மாகாண,தேசிய நடனபோட்டிகளில் பங்குபற்றி முதலிடங்களை பெற்று கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
செய்யப்பட்டிருக்கின்றன.கிராம மட்ட அமைப்புக்களின் ஊடாக கௌரவிப்புக்களையும் விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.நடனகலைமாமணி,அறிவூற்று ஆளுமை விருது,ஞான ஒளி விருது போன்ற இந்திய தமிழக விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.
இவர் நடனத்துறைக்கு ஆற்றி வரும் கலைச்சேவைக்காக கரைச்சி பிரதேச செயலகம் கரை எழில் விருது வழங்கி கௌரவித்திருந்தது.நூற்றுக்கும் மேற்பட்ட நடனஅரங்கேற்றம்,பல்வேறு நடன போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியமை மாவட்ட கலாசார பேரவையின் பொருளாளராக இருந்தமை கரைச்சி பிரதேச கலாசார பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.காலத்திற்கு ஏற்றவகையில் நவீனத்துடன் இவரது நடனங்கள் இவரது மன்றத்தின் ஊடாக பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது.
Leave a Reply