நாடக அரங்கியல் பாட ஆசிரியரும் நாடக அரங்கியல் துறை சார் பட்டதாரியுமான பொன்னையா சுரேந்திரன் 1990.03.26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.தற்போது மாயவனூர் பிரதேசத்தில் வசித்து வருகின்ற இவர்.சிறுகதை,நாடக எழுத்துரு,குறும்பட இயக்குநர்,ஒப்பனைக்கலை,வாத்திpயக்கலை,கூத்து,கிராமியகலை,நாட்டுக்கூத்து போன்றவற்றில் ஈடுபாடுடையவர்.
தியாகநெஞ்சங்கள்,சிங்கராஜாவின் தீர்ப்பு,பட்டத்து பரதேசி,காப்பு,பண்டாரவன்னியன்,பொறிக்குள் சிங்கராஜா என நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை நெறியாள்கை,எழுத்துருவாக்கம் செய்திருக்கிறார்.சிங்கராஜாவின் தீர்ப்பு,பொறிக்குள் சிங்கராஜா,பட்டத்து இளவரசி என ஏழுக்கு மேற்பட்ட நாடகங்கள் தேசிய விருதினை பெற்றுள்ளன.
சுர்வதேச அளவிலான நிகழ்நிலை மாநாடுகளிலும்,இந்திய நாட்டில் நாடக அரங்கியல் தொடர்பான மாநாடுகளிலும் கலந்திருக்கின்றார்.பல இடங்களில் வளவாளராக கலந்திருக்கின்றார்.பிரதேச,மாவட்ட கலாசார விழாக்களில் இவரது நாடகங்கள் தொடர்ந்து மேடையேறுகின்றன.
இவரது கலைச்சேவையை பாராட்டி கரைச்சி பிரதேச செயலகம் கரை எழில் விருது (2022) வழங்கி கௌரவித்தது.
Leave a Reply