யாழ்ப்பாணத்தில் ஊரெழு கிராமத்தில் 1986.09.16 ஆந் திகதி பிறந்த இவர் தற்போது கிளிநொச்சி இராமநாதபுரத்தில் நிரந்தரமாக வசித்துவருகின்றார்.இசைத்துறையில் சாதித்துவரும் பிரசாத் மிருதங்கம்,தபேலா,ஆர்மோனியம்,ஒர்கன் போன்ற வாத்தியங்கலை வாசிப்பிலும் மாணவர்களுக்கு கற்பிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றார். நவீன இசைக்கருவிகளான டோலக்,ஒக்டபாட் இசைப்பதிலும் திறமை மிக்கவர் பல்வேறு இசை வெளியீடுகள் வெளிவந்ததுடன் பல்வேறு இசை நிகழ்சிகள் ,சங்கீத சபா நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கின்றார்.
பிரதேச சபை கௌரவிப்பினையும் கலைநிறுவனங்களின் இசைத்துறைக்கான விருதுகளையும் பெற்றிருக்கின்ற இவரது கலைச்சேவையினை பாராட்டி 2024 ஆம் ஆண்டு மாவட்டசெயலக கலாசார பேரவை கலைக்கிளி எனும் உயரிய விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.
Leave a Reply