யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் 1950.08..16 ஆந் திகதி பிறந்த இவர் 33 வருடத்துக்கு மேலாக கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்து வருகின்றார்.50 வருடத்துக்கும் மேலான கலைப்பணி அனுபவம் உள்ளவர்.சிறுவயதில் இசைப்புலவர் உடுவில் சண்முகரட்ணத்துடன் சங்கீதத்தை முறைப்படி கற்றவர்.1970 களில் இருந்து பல்வேறு இடங்களில் இசைக்கச்சேரிகள் செய்திருக்கின்றார்.நல்லூர்,வல்வெட்டித்துறை,திருக்கேதிஸ்வரம் போன்ற ஆலய திருவிழாக்களில் கச்சேரி செய்திருக்கின்றார்.
190 தாயக பாடல்களையும் பக்திப்பாடல்களையும் பாடியுள்ளார்.அத்துடன் இவரது தந்தையார் பொன்னுச்சாமி தேசிகர் சிறந்த ஆர்மோனிய கலைஞர் .இவரது கணவர் சிறந்த நாதஸ்வர வித்துவான் ஆக இருந்ததுடன் கலைக்குடும்ப வாரிசாக மிளிர்ந்தனர்.குறும்படங்கள் .இலங்கை தயாரிப்பில் nளிவந்த முழுநீள திரைப்படங்களிலும் நடித்தவர்.
மாணவர்களுக்கும் தம் புலமையை கற்பித்து வரும் பார்வதியம்மாவின் இசைத்துறைக்காக ஆற்றிய பங்களிப்பினை கௌரவப்படுத்தும் முகமாக கரைச்சி பிரதேச கலாசார பேரவை கரைஎழில் (2012),மாவட்டச் செயலக கலாசார பேரவை கலைக்கிளி (2012) தெல்லிப்பளை பிரதேச கலாசார பேரவை கலைச்சுடர் பிரதேச விருது (2014) ,கலாசார அலுவல்கள் அமைச்சு கலாபூசணம் விருது (2015)வழங்கியது.வடமாகாண பண்பாட்டலுகள் திணைக்களம்;; மாதாந்த கலைஞர் கொடுப்பனவினை வழங்கி வருகின்றது..
Leave a Reply