யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் 1981.12.09 ஆம் திகதி இசைக்குடும்பத்தில் பிறந்த இவர் வாத்தியக்கலைஞரும் பாடகரும் நடிகரும் ஆவார்.தற்போது அம்பாள்குளத்தில் வசிக்கின்றார்.1994 இல் இருந்து இன்று வரை தனது கலைப்பயணத்தில் இசையமைப்பு,பாடலாக்கம்,நாடகம் பயிற்றுவித்தல்,தவில்,நாதஸ்வர கச்சேரி,தமிழ் இன்னியம் என செயலாற்றி வருகின்றார்.
ஈழமணித்திருநாட்டின் மூத்த மெல்லிசை பாடகியாக புகழ்பூத்த திருமதி பார்வதி சிவபாதம் மகனாக இருக்கின்ற இக்கலைஞனின் பாடல்களும் பிரசித்தி பெற்றவையாக இருப்பதுடன் பலரது பாராட்டுதல்களையும் கௌரவிப்புக்களையும் பெற்றிருக்கின்றன.
இவரது இசையில் வெளிவந்த மாறும் மனங்கள் நாடகம்,மலை ஒரு துளி குறும்படம்,விண்ணும் மண்ணும் நாடகம்,உயிர்குடிக்கும் பசி,தீருடன் குறும்படம்.லிவ் லைவ் குறும்படம்,பிளேட் குறும்படம்,முகமூடி காதல் குறும்படம்,உருத்திரபுரீசுவரர்பக்தி காணங்கள் சிறந்தவையாகும்.கிராமக்காற்றின் கானம் இறுவெட்டு சிறந்த பாடல்களை எழுதியமைக்கான கரைச்சி பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் பாராட்டுதல்களும் கிடைக்கப்பெற்றன.இசைத்துறைக்காக ஆற்றிவரும் சேவைக்காக வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார பேரவை இசைவேந்தன் எனும் பட்டத்தை வழங்கி கௌரப்படுத்தியது.பல்வேறுபட்ட நாடக போட்டிகளில் பங்குபற்றி இருக்கும் இவர் அதற்குரிய விசேட விருதுகளையும் பரிசில்களையும் பெற்றிருக்கின்றார்.
Leave a Reply