பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் 1939.02.11 இல் பிறந்த இவர் இலக்கிய துறையில் கிளிநொச்சி மண்ணில் பெயர் சொல்லக்கூடிய மூத்த கலைஞர். 1956 ஆம் ஆண்டு வெற்றிமணி பத்திரிகையில் கட்டுரைகள்,சிறுகதைகள்; என ஆரம்பித்த இலக்கிய பயணம் தற்போது சிறந்த எழுத்தாளனாக அடையாளம் கொடுத்தது. இவரது சிறுகதை தொகுதியான ஓய்வு,கரைசேராப்படகுகள் முக்கிய இலக்கிய படைப்பாகும்.இவரது கலைத்துறை சாதனைகளை கௌரவிக்கும் முகமாக கரைச்சி பிரதேச செயலக கரை எழில் விருது(2011) கிளிநொச்சி மாவட்டச்செயலக கலைக்கிளி விருது(2012) ஆளுநர் விருது(2013) கலாபூசணம் விருது (2010) பிரதேச சபை கலைஞர் ,2013 ஆளுநர் விருது கௌரவிப்பினையும் பெற்றுள்ளார்.மாவட்ட மட்ட சிறுகதை போட்டிகளில் இவரது சிறுகதை பல முதலிடங்களை பெற்றவை குறிப்பிடத்தக்கது.
சிறுவயதில் இருந்து பத்திரிகைகளில் எமூதி வருகின்ற இவரின் கலைச்சேவை மற்றும் வறுமையை கருத்திற்கொண்டு மாதாந்த கலைஞர் உதவுதொகையினை வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கி வருகின்றது.தற்போது திருநகர் வடக்கில் வசித்து வரும் இளையதம்பி நடராசா சோதிடமும் தெரிந்த ஒருவர்.
</p>
திரு.இளையதம்பி நடராசா
Posted on
by
Leave a Reply