சின்னத்தாழையடி தர்மக்கேணி
பளைப் பிரதேசத்தில் தர்மக்கேணி கிராமத்தில் 17.10.1957 ஆம் ஆண்டு பிறந்தார். மிருசுவில் தவசிகுளத்தை சேர்ந்த அண்ணாவியார் செல்லத்துரை என்பவரினை குருவாகக் கொண்டு கலைப்பயணத்தை தொடங்கினார்.
1970 இல் தனது 12 ஆவது வயதில் பாலகாத்தானாக நடித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து தர்மக்கேணி பகுதியைச் சேர்ந்த அண்ணாவியார் சுந்தரம்பிள்ளை அவர்களுடன் இணைந்து நடித்தார். இத்துடன் மல்லாவி ஒட்டறுத்த குளத்தில் உள்ள கண்ணகியம்மன் ஆலயத்தில் 1998 ஆம் ஆண்டு காத்தவராயன் கூத்தினை அரங்கேற்றனார். பூதவராயர் கலாமன்றத்தினை சிறப்புடன் செயற்படுத்தி வருகின்றார்.
தனது காலத்தில் சோமசுந்தரம் பாத்திரத்திலும் பாலகாத்தானாகவும் சத்தியவான் சாவித்திரி வள்ளி திருமண நாடகத்தில் காத்தான் முத்துமாரியாகவும் எனப் பல வேடங்களில் நடித்து வந்தவர். இவரின் கலைச் சேவையைப் பாராட்டி கலைத்தென்றல் விருது 2018 ஆம் ஆண்டு பிரதேச செயலகத்தால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Leave a Reply