வாரித்தம்பி உதயகுமார்

Posted on

by


அல்லிப்பளை
வாரித்தம்பி நாகமுத்து தம்பதிகளின் புதல்வனாக 1963.06.04 ஆம் திகதி பிறந்தார். அல்லிப்பளை உதயன் என அடையாளமிடப்பட்ட இவர் சோரன்பற்று கணபதிப்பிள்ளை அண்ணாவியார் ஆறுமுகம் அவர்களின் நேரடி மாணவனாகவும் அவர்களின் வழிநடத்தல்களை பின்பற்றி வருபவராகவும் காத்தவராயன் கூத்தில் அதீத ஈடுபாடு கொன்டீரந்ததுடன் இதில் சிறுவயதிலிருந்து முன்னம்மன் ,நாரதர்,சிவன்,போன்ற பாத்திரங்களை பெற்று நடித்ததுடன் அப்பிரதேச மக்களின் பாராட்டையும் பெற்றார்.


1989.90 களில் அறத்தியமமன சாலை வைரவர் ஆகிய ஆலயங்களில் காத்தவராயன் கூத்தினை மேடையேற்றியதுடன் ஆறுமுகம் அண்ணாவியாரின் நெறிப்படுத்தலில் தொடர்ந்து கூத்தினை பழக்க தொடங்கினார். அல்வாய் குமுளடிப்பிள்ளையார், நெல்லண்டை பத்தரகாளி ஆம்மன், அத்துளு அம்மன், காரைநகர் முருகன், கல்லாறு பிள்ளையார், இரட்டைக்கேணி கண்ணகி அம்மன் போன்ற கோவில்களில் காத்தவராயன் கூத்தினை அரங்கேற்றினார். அரிச்சந்திர மயான காண்டம், கோவலன் கண்ணகி நாடகத்தினையும் மேடைேயுற்றினார்.

கூத்திசை நாடகம் மட்டுமன்றி உடுக்கு, ஆர்மோனிய கருவிகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவராகவும் காணப்படுகின்றார். ;.இவரது கலைப்பணியை பாராட்டி பிரதேச செயலகத்தால் கலைத்தென்றல் விருது 2022 ஆம் அண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *