நாடகத்துறை
பச்சிலைப்பள்ளி புலோப்பளை கிழக்கினை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். 26.05.1942 இல் பிறந்த இவர் புலோப்பளை சென்பீற்றஸ் கலாமன்றத்தினூடாக தனது கலைப்பங்களிப்பை ஆற்றி வருகின்றார்.
இவர் பல நாடகங்களை ஆரம்ப காலத்தில் நடித்து வந்தவர்.தற்போது அண்ணாவியராக இருந்து பல இளம் தலைமுறையினருக்கு நாடகங்களை பழக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது கலைப்பணியை பாராட்டி 2017 ஆம் ஆண்டில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலமும் கலாசார பேரவையும் இணைந்து கலைத் தென்றல் விருது வழங்கி கௌரவித்தது.
Leave a Reply