இசை (மிருதங்கம்) – தம்பகாமம்
கிளிநொச்சி மாநகரின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பளைப்பகுதியில் பிறந்தவர். தனது ஒன்பதாவது வயதிலிருந்து தோல் வாத்தியங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். பாடசாலைக் கல்வியை பளை மகாவித்தியாலயத்தில் கற்றார் பளைப்பிரதேசத்தின் நாடக, கூத்துக் கலைஞர்களுடன் இணைந்து தனது சொந்த முயற்சியாலேயே தோல் வாத்தியங்களை இசைக்கக் கற்றுக் கொண்டார்.
செல்லையா அண்ணாவியார் மற்றும் வில்லிசை விற்பன்னர் சின்னமணி போன்றோருடன் இணைந்து கல்மடு, உருத்திரபுரம், உடுத்துறை, வெற்றிலைக்கேணி, செம்பியன்பற்று போன்ற பிரதேசங்களில் ஆலய நிகழ்வுகளுக்கும், கூத்து நிகழ்வுகளுக்கும் மிருதங்கம் வாசித்துப் பிரசித்திபெற்றார்.
துர்க்கா கலைமன்றத்தினூடாக கலை வளர்ச்சிக்கு மட்டுமன்றி பல சமுகப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றார். பல்வேறு கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு காலகட்டங்களில் பற்பல நிகழ்வுகளில் மிருதங்கம், தபேலா, டொல்கி போன்ற தோல் வாத்தியங்களை வாசித்து மக்களை வசியப்படுத்தியுள்ளார்.
இவருக்கு கலைத்தென்றல் விருது, கலைக்கிளி விருது போன்ற விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இசையால் வசப்படாத இதயங்கள் இல்லையென்பதற்கிணங்க பல்லிசை வாத்தியக் கலைஞராக வாழ்ந்து வருகின்றார்.
Leave a Reply