தவராசா நாகராணி

Posted on

by

1950 ஆம் ஆண்டு பளை நகரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இவர் தம்பதிகளின் மகளாக பிறந்த நாகராணி அவர்கள் சிறுவயது முதல் கொண்டு கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

தனது பாடசாலைக் காலத்தில் கும்மி, கோலாட்டம், அரிவு வெட்டு நடனம் போன்ற கிராமிய நடனங்களை மேடையேற்றி பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.


தனது 24 வயதில் பளை இரட்டைக்கேணி கண்ணகையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற கோவலன் கண்ணகை நாடகத்தில் கண்ணகையாக நடித்து தனக்கெனவோர் தனித்துவமான புதிய பாணியை உருவாக்கினார். காத்தவராயன் கூத்து, வில்லுப்பாட்டு என தனது கலைப்பங்கினை வழங்கி ஆர்ப்பாட்டமில்லாமல் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப தன்னை மெருகூட்டி கலைத்துறைக்கு காத்திரமானதோர் பங்களிப்பினை வழங்கி வருகின்றார். இவரது கலைச்சேவையை பாராட்டி கலைத்தென்றல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *