நாட்டுக்கூத்தில் நடித்து பிரபல்யமானார் தன் இளம் வயதில் கிளாலி புனித மைக்கேல், கிளாலிப் பிரதேச கலைஞர்கள் உருவாக்கிய யூதகுமாரன் பொண்ணர் செபமாலை போன்ற நாடகங்களில் நடித்தார். கைதியின் காதலி எனும் சமுக நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார் .இந்நாடகம் இவரது சமுகப் பார்வையை பிரதிபலிக்கின்றது.
தனது 35வது வயதின் பின்னர் இறை பக்திப் பாடல்களைப் பாடுவதுடன் அவற்றை இறுவட்டுக்களாக வெளியீடு செய்வதில் ஆர்வம் காட்டினார் 2000 ஆம் ஆண்டு ஞான சௌந்தரி நாடகத்தை துணைக் கலைஞருடன் இணைந்து ஏனைய கலைஞர்களுக்குப் பழக்கி தனது கலைப் பாரம்பரியத்தை அடுத்த சந்ததிக்கும் கொடுக்க விளைந்தார் யாகப்பர், சந்தியோகுமையோர் தேர்ப்பவனிப் பாடல்கள் எனும் இறுவெட்டொன்றை வெளியீடு செய்துள்ளார்.
கலைப்பணியூடாக இறைபணியாற்றுவதுடன் ஏனைய மக்களையும் இறை அமைதியை சுவைக்க அழைக்கும் இக்கலைஞனுக்கு2023 ஆம் ஆண்டு கலைக்கிளி வழங்கப்பட்டது.
Leave a Reply