வளம் கொழிக்கும் வன்னிமண்ணின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் புலோப்பளை கிழக்கின் மைந்தனாக பிறந்தவர் திரு மிக்கேல் பிரான்சிஸ் சிறந்த நாடகக் கலைஞனாக தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகின்றார் புலோப்பளை புனித பேதுரு கலாமன்றத்தினூடாக பல கலைஞர்களை உருவாக்கும் பணியில் தன்னை இணைத்து அளப்பரிய சேவையாற்றிவருகின்றார்.
அரசினர் வைத்தியசாலையின் ஒரு பணியாளனாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள போதும் பொதுச் சேவைகளிலும், மக்கள் பணியாற்றுவதிலும் ஆர்வமுடன் செயற்படுகின்றார் கிராம அபிவிருத்திச் சங்கம், கமக்காரர் அமைப்பு, ஓய்வூதியர் நம்பிக்கை நிதியம், ஆலய அருட்பணிச் சபையின் செயலாளர் என அனைத்து மட்டங்களிலும் நற்பணி புரிந்து வருகின்றார்.
1957 தொடக்கம் இன்றுவரை கலைப்பணியாற்றும் இவர் கற்பகமாலா, புனிதவதி, கிறிஸ்தோபர், சங்கிலியன், மனம் போல மாங்கல்யம், போன்ற பல நாடகங்களில் நடித்து பாராட்டுப் பெற்றுள்ளார் இவரது கலைச்சேவைக்காக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் 2016ம் ஆண்டு கலைத்தென்றல் விருதுவழங்கி கௌரவித்தது
இத்தகைய தூரநோக்குடைய, மக்கள் சேவகத்துடன் கலைப்பணியையும் இனிதே ஆற்றும் இக்கலைஞருக்கு கலைக்கிளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Leave a Reply