
இராசா சின்னம்மா தம்பதிகளின் புதல்வரான தியாகராசா தர்மக்கேணி சின்னத்தாளையடி பிரதேசத்தின் பாரம்பரிய கலைஞர்களுள் முக்கியமானவர்.தனது ஆரம்பக் கல்வியை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்ற காலத்திலிருந்தே கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.தனது ஒன்பதாவது வயதிலேயே அரிச்சந்திர மயான காண்டத்தில் நடித்து அனைவரதும் பாராட்டைப் பெற்றார்.
கண்டாவளைப் பிள்ளையார் கோவிலில் 1973 ஆம் ஆண்டில் தனது 10 ஆவது வயதில் அரிச்சந்திர மயான காண்டத்தில் நடித்தார்.சத்தியவான் சாவித்திரிஅல்லி அர்ச்சுனா போன்ற சமூக நாடகங்களில் நடித்தார்.
தொடர்ந்து தற்பொழுது இப் பிரதேசத்தில் பூதவராயர் கலாமன்றம் மூலமாக இளங்கலைஞர்களுக்கு பழக்குவதை தனது கலைப்பணியாக செய்து வருகின்றார். இவருக்கு பிரதேச செயலகம் மூலமாக கலைத்தென்றல் விருதும பிரதேச சபை மூலமான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply