சின்னத்தாளையடி,தர்மக்கேணி
கூத்துக் கலைஞர்
சுின்னத்தாளையடிக் கிராமத்தில் 1957.10.17 இல் பிறந்த கந்தையா குலேந்திரராசா சிறு வயது முதல் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தாலும் நாட்டுக் கூத்தினையும் அதிலும் காத்தான் கூத்தினை சிறப்பாக பயின்று வந்துள்ளார்.
1970 இல் 12 வயதில் பாலகாத்தானாக நடித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.அண்ணாவியார் சுந்தரம்பிள்ளையுடன் இணைந்து காத்தவராயன் கூத்தினை பழகி வந்தார்.
பூதவராயர் கலாமன்றத்தின் ஸ்தாபகரில் ஒருவராக செயற்பட்டு வருவதுடன் தனது காலத்தில் சோமசுந்தரம் பாத்திரத்திலும் பாலகாத்தானாகவும்,சத்தியவான் சாவித்திரி நாடகத்திலும் வள்ளி திருமண நாடகத்தில் முருகனாகவும் ,காத்தான் முத்துமாரியாகவும் என பல நாடகங்களில் நடித்துள்ளார்.இவரின் கலைச்சேவையை பாராட்டி கலைத்தென்றல் ,பிரதேசசபை விருது என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Leave a Reply