கோவில்வயல்
1942.06.13
ஆர்மோனியக் கலைஞர்
கோவில்வயலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா வல்லிபுரம் தனது சிறுவயதிலிருந்தே காத்தவராயன் பின்னணிப் பாடல்களை பாடிவந்துள்ளார்.சிறு வயது முதல் தனது பார்வை வளத்தை இழந்திருந்தாலும் தனது சிறிய தந்தையாரின் முயற்சியால் தற்போது ஆர்மோனியத் துறையில் பிரபல்யமானவராக விளங்குகின்றார்.
தனது முதலாவது மேடையேற்ற நிகழ்வை 1972 ஆம் ஆண்டு நெளியாாய் அம்மன் கோவிலில்; இடம்பெற்ற வருடாந்த திருவிழாவில் காத்தவராயன் கூத்திற்கு ஆர்மோனிய வாசிப்புடன் தொடர்ந்தார்.அண்ணாவி ஆறுமுகம் அவர்களுடன் சேர்ந்து திரியாய் அம்மன் ,அறத்தி அம்மன் கோவில்களில் 1990ஃ92 காலப்பகுதியில் கூத்துப் பாடல்களுக்கு ஆர்மோனியம் வாசித்து வந்துள்ளார்.நவினவெளி அம்மன்,விஸ்வமடு அதிசய விநாயகர்,கண்ணகி நகர்,தட்டுவன்கொட்டி,நாகர்கோவில்,மாமுனை,போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கும் சென்று அண்ணாவியார்களுடன் சென்று சிறப்புற ஆர்மோனியம் வாசித்து வந்தார்.
இவரின் கலைச்சேவையைப் பாராட்டி கலாபூசணம் விருது,கலைத்தென்றல் விருது,முதலமைச்சர் விருதுஈகலைக்கிளி விருது,பிரதேச சபை விருது என்பவற்றை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply