புலோப்பளை மேற்கு
1948.07.03
மிருதங்கக் கலைஞர்
வேலன் கந்தையா தங்கம் தம்பதியினரின் மகனாக யோகராசா தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் அ.த.க பாடசாலையில் பெற்றுக் கொண்டார்.அக்காலத்திலிருந்தே காத்தவராயன் கூத்தின் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார்.ஆயினும் இவரது ஆர்வம் மிருதங்க துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.17,18 வயதுகளில் கொழும்புக்கு மரக்கறி அனுப்பும் “மரக்கலமிருஸ்”என்பவரிடம் மிருதங்கத்தையும் பாட்டுப்பாடுதலையும் முறைப்படி கற்றிருந்தார்.
தொடர்ச்சியாக இவர் பளைப் பிரதேசம்,கைதடி வடக்கு,கோப்பாய் கிருஸ்ணன் கோவில்,என்பவற்றில் நடனம்,மிருதங்க கச்சேரிகளினை மேற் கொண்டார்.சங்கத்தானையில் 1982 ஆம் ஆண்டு சினிமாப்பாணியில் மேடைேயுற்றப்பட்ட “நீரும் நெருப்பும்”எனும் நாடகத்திற்கு மிருதங்கம் வாசித்தார்.பளைப் பிரதேசத்தில் 1974 ஆம் ஆண்டு தொடக்கம் சின்னத்துரை அவர்களுடன் இணைந்து நாடகங்களுக்கு மிருதங்கம் வாசித்தமை ,அத்துடன் ஆறுமுகம்,செல்லத்துரை,சின்னத்;துரை,செல்லையா போன்ற கலைஞர்களுடன் இணைந்து அவர்களின் கூத்துக்களுக்கு பிரதான மிருதங்க வித்துவானாக செயல்பட்டார்.
மிருதங்கம் உட்பட தோல்கருவிகளை திருத்தம் செய்யும் ஒருவராக இவர் உள்ளமை இவரது சிறப்புக்களுள் முக்கியமானது. புதிய கருவிகள் உருவாக்கம் திருத்தம் என்பன இவரது கலைப் பணியாக தற்போது வரை உள்ளது.
இவரது கலைச்சேவையைப் பாராட்டி கலைத்தென்றல்,கலைக்கிளி,பிரதேசசபை விருது என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply