பாவிலுப்பிள்ளை ஜோர்ஜ்

Posted on

by


இந்திராபுரம்,பளை

இத்தாவில் பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாவிலுப்பிள்ளை ஜோர்ஜ் அவர்கள் பாவிலுப்பிள்ளை லோறன்சியா தம்பதிகளின் 8 ஆவது புதல்வனாக 1959 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பளையில் கத்;;தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.


இவர் தனது வேம்படுகேணி சி.சி.த.க பாடசாலை,பளை மகாவித்தியாலம் ஆகியவற்றில் தனது ஆரம்ப கல்வியையும் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றார்.இவர் சிறு வயது முதல் கலை ,இலக்கியம் ஆகிய துறைகளில் மிகுந்த ஆர்வமுடையவராக விளங்கிளனார்.இவர் தன்னுடைய 12 ஆவது வயதிலிருந்தே இசையில் நாட்டமுடையவராக விளங்கினார்.

ஆலய பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கிய இவர் ஆர்மோனியம்,மிருதங்கம் ஆகியவற்றை வாசிக்கக் கற்றுக் கொண்டார்.இவரின் தகப்பனார் ஒரு மிருதங்க கலைஞராவார்.அவரிடமிருந்து மிருதங்கத்தையும் கற்றுக் கொண்டார்.


ஆலயங்களில் ஓகன் இசை வழங்கியதுடன் வருடாந்த பெருவிழாக்கள் ,ஒளிவிழா என்பவற்றில் ஈடுபடுபவர்களுக்கு பாடல்களை பாடகர்குழாமுக்கு பழக்குவதிலும் ஓகன் இசை வழங்குவதிலும் முன்னின்று செயற்பட்டார்.கலைவிழாக்களிலும் பாடசாலை நிகழ்வுகளிலும் இசை வழங்கும் பணிகளை மேற்கொண்டார்.பளை பிரதேசத்திலும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி பிரதேசங்களிலும் இன்று வரை கலைப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

பல பாடல்களுக்கு சொந்தக்காரனாக இவரது படைப்புக்கள் இன்றுவரை எமது பச்சிலைப்பள்ளி உட்பட பல பகுதிகளிலும் பதிவில் உள்ளது.இவ்வாறாக ஓகன்,மிருதங்கம்,பாடலாக்கம் என கலைப்பணியில் சிறப்புற செய்த சேவைக்காக பாவிலுப்பிள்ளை ஜோர்ஜ் அவர்களுக்கு கலைத்தென்றல் -2024 விருது வழங்குவதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் பெருமையடைகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *