
இரத்தினபுரம் கிராமம் உருவாகிய நாளில் இருந்து இத்தி மரத்தின் கீழ் விநாயகப் பொருமானை வைத்து அப்போதைய கிராமத் தலைவரும் ஆலய நிர்வாகத் தலைவருமாகிய இராசரத்தினம் ஜயா அவர்களால் எம் பொருமானுக்கு பூ வைத்து வழிபட்டு வந்தார். அதனை தொடர்ந்து கிராம மக்களால் பொருமானுக்கு பொங்கல் மோதகம் வைத்து பூசை செய்து வந்தார்கள் இந் நிகழ்வின் போது அடியார்கள் எல்லோரும் சேர்ந்து ஆலயம் அமைக்க வேண்டும். என்ற எண்ணக்கருவுடன் அதற்கான அத்திவாரம் இடப்பட்டு பல காலமாக கட்ட முடியாது தேங்கி நின்ற வேளையில் ஊர் பெரியவர்களின் முயற்சியால் ஆலயம் அமைக்கும் பணி ஆரம்பமாகியது.
தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வரும் காலத்தில் நாட்டுப்பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்ட வேலை மீண்டும் ஆரம்பமாகி சிறிது சிறிதாக வேலைகள் நடைபெற்றது. 2003ம் ஆண்டு அளவில் ஆலயத்தின் வேலைகள் பூரணமாக செய்ய வேண்டும் என்ற எண்ணக் கருவுடன் வேலைகள் ஆரம்பமாகி மக்களின் பங்களிப்புடன் கட்டிடம் மிளிர ஆரம்பித்தது. ஆகவே அந் வேளையில் ஆலய நிர்வாகிகளின் முடிவுடன் கும்பாபிக்ஷேகம் செய்யப்பட்டது.
2005ம் ஆண்டு கும்பாபிக்ஷேகம் எம்பெருமானின் ஆலயத்தில் நிறைவுபெற்று இன்று வரை உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி அடியவர்களுக்கு அருட்கடாச்சம் கொடுத்த வண்ணம் இன்னருள் புரிகின்றார்.
Leave a Reply