ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் -உதயநகர் மேற்கு

Posted on

by

இலங்கையின் வடமாகணத்தில் கிளிநொச்சி நகரில் இருந்து 1 1Æ2முஆ தொலைவில் உள்ள உதயநகர் எனும் கிராமத்தில் அழகிய நீர்வளம் சூழ்ந்த பள்ளத்து மாரிஅம்மன் என அமைக்கப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுப் பகுதி பின்வருமாறு கிளிநொச்சி நகரில் முரசுமோட்டை எனும் கிராத்தின் குடிமகனான கந்தையா பூபாபலசிங்கம் அவருடைய மனைவியார் வனிதாதேவி விவசாயத்தை தொழிலாகக் கொண்டு வந்த போது பூபாலசிங்கத்தின் கனவில் முத்துமாரியம்மன் தோன்றி தன்னை ஆதரிக்கும் படி கனவின் ஊடாக வேண்டப்பட்டாராம்.


அவர்கள் குடியிருந்த மனையில் வேப்பமரத்தடியில் ஒரு கல்லை வைத்து வழிபட்டு வந்தார். இதன் பின் எனக்குரிய இடம் இது இல்லை என்றும் உதயநகர் என்னும் கிராமத்தில் நீர்வளம் சூழ்ந்த பள்ளத்தரையை அடையாளமாக கனவில் காட்டப்பட்டதாம். இதன் பின் 1970 ஆண்டு காலப்பகுதியில் காடு வெட்டி மக்கள் குடியேறிய போது பூபாலசிங்கம் அவர்களும் தங்கள் குடியிருப்புக்காக நாளாந்தம் பல கஸ்ரங்களுக்கு மத்தியில் பத்து ஏக்கர் காணியை ஒதுக்கி கனவில் தோன்றி அடையாளமாக ஒரு வேப்ப மரமும் அதன்கீழ் மேட்டு நிலமாக இருந்த இடத்தில் தாங்கள் முரசுமோட்டையில் வைத்து வழிபட்ட முத்துமதரியம்மனை 1971ம் ஆண்டு கொண்டு வந்து வைத்து வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்களால் ஸ்ரீ முத்துமாரியம்மன் எனப்பெயர் இட்டு மக்களால் நிதி சேகரிக்கப்பட்டு அம்மன் விக்கிரகம் ஒன்று வேண்டப்பட்டு வழிபாடு செய்து வந்தனர் 1989- 1990 புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு ஆலயம் அமைக்க தீரமானம் எடுக்கப்பட்டது. இதற்குரிய ஆலயத்திருப்பணி வேலையினை தொடரமுற்பட்ட போது இது நீர் தேக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது என கூறப்பட்டு ஆலயத்தினை வேறு வளாகத்தில் அமைக்க முடிவு செய்து கந்தசாமி கருப்பாயி என்னும் அடியார் 3Æ4 ஏக்கர் காணியை அன்பளிப்பாக கொடுக்க திருப்பணி வேலைகள் நடைபெற்றது. இதன்பின் சிறிது காலம் தாமதம் அடையப்பெற்று அப்போது இருந்த பிரதேச செயலாளர் தலைமையிலம் மக்க்ள ஒன்று திரண்டு அம்மன் திருவுருவத்தை அவ் விடத்தில் வைத்தார்கள். இதன் பின்னர் 1991ம் ஆண்டு கும்பாபிக்ஷேகம் இடம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *