இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு மேலாக எமது ஆதி வீரபத்திரர் ஆலயம் வழிபாட்டுத்தலமாக இருந்து வருகின்றது.இவ் ஆலயம் எமது மூதாதையர்களால் தொன்று தொட்டு வழிபடப்பட்டு வந்துள்ளது.இவ் ஆலயத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரியக் கதை ஒன்றும் உள்ளது.
இக்கிராமத்து மக்கள் மிகவும் கொடிய நோயினால் ஆட்கொள்ளப்பட்டு இறப்பினை எதிர்கொண்டு வந்தார்கள்.இவ்வாறான நிலையில் மக்கள் எல்லோரும் கூடி ஆராய்ந்தார்கள் மக்கள் ஏன் இவ்வாறு வெகுவாக அழிவடைகின்றனர் என ஆராய்ந்த நிலையில் கெற்பேலியில் உள்ள வன்னியர் ஆலயத்திற்குச் சென்று அங்குள்ள வாக்குச் சொல்லும் ஒருவரிடம் அது பற்றிக் கேட்டது வன்னியர் சொன்ன வேத வாக்கு கிளாலியிலுள்ள பெரும்படை எனும் இடத்திலிருந்து தேசிக்காய் ஒன்றை எறிந்தார்.இவ்வாறு எறிந்த காய் விழுந்த இடத்தில் ஓர் வீரபத்திரர் ஆலயத்தை எருவாக்கி வழிபடுங்கள் உங்கள் நோய்,பிணி எல்லாம் நீங்கி விடும் என்றார்.
எறிந்த தேசிக்காயை மக்கள் எலலோரும் தேடிக் கண்டுபிடித்த அந்த இடத்திலேயே வீரபத்திரர் ஆலயம் உருவாக்கப்பட்டது.இவ்வாலயத்தில் மூலமூர்த்தி வீரபத்திரரும் வீரமாகாளி, பிள்ளையார், முருகக்கடவுள், வைரவர், ஐயனார், காத்தவராயசுவாமி ஆகிய தெய்வங்கள் வைத்து மக்களால் வழிபடப்படுகின்றது.
இவ் ஆலயத்தின் சிறப்புப் பூசைகளாக தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி,சித்திரை வருடப்பிறப்பு, சித்திரபுத்திரர் கதை, வைகாசிப் பொங்கல்,ஈவணிச்சதுர்த்தி,பிள்ளையார் பெருங்கதைப்பூசை என்பனவும் சிறப்புப் பூசைகளாக நடைபெறுகின்றன.அத்துடன் இவ்வாலயத்தில் வருடாந்த பொங்கல் உற்சவம் போது காத்தவராயர் சுவாமிக்கு மடை வைக்கப்படும்.இவ்வாலயத்தை வழிபட்டதன் பின்னர் கிளாலி வாழ் மக்கள் நோய் துன்பங்கள் இன்றி செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
Leave a Reply