கிளாலி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயவரலாற்றுச் சுருக்கம்

Posted on

by

இவ் ஆலயம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் கிளாலி கிராம சேவகர்பிரிவில் நீரிவில் குளத்திற்கு அருகாமையிலுள்ள சரவணை மரங்கள் அடர்த்தியாக உ;ள்ள இடத்தில் 1956 ஆம் ஆண்டு செ.வள்ளிப்பிள்ளையினால் ஆரம்பிக்கப்பட்டது.

கிளாலி பழம்பிள்ளையார் என அழைக்கப்படும் ஆலயத்திற்கு செ.வள்ளிப்பிள்ளை இவருகள் ஆலயக்கட்டத்தை அமைப்பதற்கு கருங்கற்கள் ஏற்றிச் சென்ற போது இவ்வாலய உரித்தாளர்கள் கட்டடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்ததால் இக்கற்களை ஏற்றிக் கொண்டு அருகாமையிலுள்ள நீருவில் எனும் இடத்திற்கு அவரது காணியில் கற்களை பறித்து கோவிலினை உருவாக்கி அதற்கு புதுப்பிள்ளையார் என்று பெயர் சூட்டப்பட்டதோடு அதன் நியப் பெயராக ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் என்று சூட்டப்பட்டது,இதுவே இக்கோயில் அமைப்பதற்கு காரணமாக அமைந்தது.


இதன் பின் ஆலயத்தில் பிள்ளையார், அம்மன், நாச்சிமார்,முருகன் , வைரவர்,வைத்து வணங்கி வந்துள்ளனர். அத்துடன் ஆனிமாதத்தில் வரும் உத்தரநாளில் சிறப்பாக பொங்கல் காவடி இசைக்கச்சேரி நடைபெற்று தன்னை நாடி வரும் மக்களின் துயர் துடைத்து அருள்பாலித்து வருகிறார்.இந்த நாட்டில் ஏற்பட்ட இசாதாரண சூழ்நிலையினால் இவஇ ஆலயத்தில் உள்ள புதுப்பிள்ளையார் களவாடப்பட்டது. தற்போது சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு இவ்வாலயத்தின் பூசகராக யோ.பிரகாஸ் நடாத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *