முத்துமாரி அம்மன் ஆலயமானது கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தர்மக்கேணி (சின்னத்தாளையடி) எனும் ஊரில் கணண்டி வீதியிலிருந்து தெற்குப் புறமாக 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்து அருள்பாலிக்கின்றாள்.இவ்வாலயத்தில் பிள்ளையார்,முருகள் ,வைரவர், ஆலயம் தென்மேற்கு மூலையை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது.
மூல தெய்வமாகிய முத்துமாரி அம்மன்,துர்;க்கை ,காத்தவராயர், ஆகியோரின் இருப்பிடம் பிள்ளையாரின் இருப்பிடத்திலிருந்து 100 மீற்றர் இடைவெளியில் அமையப்பெற்றுள்ளது.மூலமூர்த்தியான அம்மனிற்கு முன்புறமாக வலது பக்க மேற்கு முகமாக நாகதம்பிரான் வீற்றிருக்கின்றார்.இவ்வாலயமானது மிகவும் பழமை வாய்ந்தது என்று மூதாதையர்களால் கூறப்பட்டுள்ளது.
அதற்கான சான்றுகள் இல்லாத போதும் இங்குள்ள நாகதம்பிரான் இருப்பிடத்திலுள்ள பாலைமரம் இற்றைக்கு பல நூற்றாண்டுகள் கடந்தவையாக காணப்படுகின்றது.
இன்னொரு அம்சமாக கோவிலை அண்மித்த பகுதிகளில் கேணிகள் காணப்படுகின்றன.அக்கேணிகளின் பெயர்கள் காப்புத்தாட்ட கேணி என்றும் பன்றி விழுந்த கேணி என்றும் கூறப்படுகிறது.அதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.தர்மர் என்பவரால் இக்கேணிகள் வெட்டப்பட்டது என்றும் அதனால் தர்மக்கேணி என்று பெயர் வந்தது என்றும் மூதாதையர்களால் கூறப்பட்டு வந்தமை எமக்கு தெரிந்தது.1890ம் ஆண்டு தர்மர் என்பவரே இவ் ஈலயத்தில் பூசை செய்ததாகவும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. அதற்கு பிற்காலத்தில் அவரது மகனான தர்மர் ஏரம்பு பூசகராக இருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து 1934ம் ஆண்டு திரு சிதம்பரப்பிள்ளை, திரு இராசதுரைஇ திரு ஆ. சுப்பிரமணியம், திரு க செல்வராசா என்பவர்கள் பூசகர்களாக இருந்தனர்.
தற்காலத்தில் அவர்களது பரம்பரைவழியினரால் முத்துமாரிக்கு பூசை செய்து வரப்படுகின்றது. 1992ம் ஆண்டு காலப்பகுதியில் இதற்கு நிர்வாக கட்டமைப்பு கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதன் சான்றுகளும் இ;டப்பெயர்வு காரணமாக தொலைந்து இடப்பெயர்வுகளுக்கு பின்பு நிர்வாக சபை கூட்டப்பட்டு நிர்வாக சபை இயங்கி வருகிறது. தற்பொழுது முத்துமாரிக்கு கட்டடம் அமைக்கும் திருப்பணி நடைபெறுகின்றது. இங்கு பொங்கல் உற்சவத்துடன் காத்தவராயர் கூத்து வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply