
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வர்த்தமானப் பிரசுராலயமான இவ்வாலயமானது 1895 இல் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் சுழியார் மோசேஸ் என்பவரின் அயரா முயற்சியினால் உருவாக்கப்பட்டது.
மோசேஸ் என்பவரின் குடும்பத்தினர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கத்தோலிக்கர். பாலைதீவு வழியாக ஊர்காவற்துறை நோக்கிய கடற் பயணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது புனித அந்தோனியாரால் குழந்தை மோசேஸ் அற்புதமாகக் காப்பாற்றப்பட்டதால், அதன் நினைவாக அவரது தந்தையாரால் அவர் காப்பாற்றப்பட்ட இடமாகிய பாலைதீவில் ஒரு அந்தோனியார் சுரூபம் நாட்டப்பட்டது. அதன் பின் அமரர் மோசேஸ் அவர்களின் முயற்சியினால் தன்னைக் காத்த அந்தோனியாருக்காக ஒரு அழகிய ஆலயம் அமைக்கப்பட்டது. 1895 – 1947 வரை இவரே ஆலயத்தின் மூப்பராகப் பணியாற்றினார்.
1947. இல் அவரது இறப்பின் பின் அவரது வழிமரபினரால் இன்றுவரை அவ்வாலயம் பராமரிக்கப்பட்டு வரருகிறது. யாழ் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இயங்கி வந்த இவ்வாலயமானது கிளிநொச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டதன் பின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வலைப்பாடு புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தையின் பரிபாலனத்தில், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மாவட்டசெயலகம், பிரதேச செயலகம் இணைந்து பிரதேச சபை, வைத்திய, சுகாதாரத்துறை, பொலிஸ், கடற்படை ஆகியோரின் உதவியுடன் வருடந்தோறும் திருவிழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply