புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயம், கனகபுரம்

கனகபுரம் கிராமத்தில் ஒரு சிற்றாலயமாக அமைந்து அருள்வழங்கும் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் 1990 ம் ஆண்டு மேரி யோசேப் என்பவரோடு இணைந்த ஆலய மக்களினது அரும் முயற்சியால் உருவாக்கப்பட்டது.

1986 இல் இளவாலையைச் சேர்ந்த திரு தேவசகாயம் அமுதரத்தினம் என்பவர் தனது காணியின் முன்பகுதியில் இரண்டு பரப்புக் காணியினை ஆலயத்திற்கென ஒதுக்கி சிறிய கொட்டில் ஆலயம் ஒன்றை அமைத்தார். இவ்வாலயத்தில் அன்றைய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை மைக்கல் வழிபாடுகளை நடாத்தினார்.

இந்துமத சகோதரர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பிரதேசத்தில், அவர்களின் ஒத்துழைப்புடன் வருடம்தோறும் சித்திரை மாதத்தில் அன்னையின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஹீகாந்தா சனசமூக நிலையத்தினர் வருடாந்த திருவிழாவிற்கென ஒரு தொகைப் பணத்தினை வழங்கிவருவதுடன், மேரி யோசேப் என்பவரின் குடும்பத்தினரும் கணிசமான பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *