புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கச்சி

ஆம் ஆண்டில் வட்டக்கச்சிப் பகுதியில் கொலனி குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு குடியேற்றப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்காக கிளிநொச்சிப் பங்கின் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை சூசைநாதர் மற்றும் அருட்தந்தை செல்வரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து மரியநாயகம், வஸ்தியாம்பிள்ளை, ஜோசேப் ஆகியோரின் இல்லங்களில் செப வழிபாடுகளை ஆரம்பித்தனர். காலப்போக்கில் இவ்விரண்டு அருட்தந்தையர்களும் இணைந்து கிறிஸ்தவர்களின் உதவியுடன் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சிறு கொட்டில் ஆலயம் ஒன்றை அமைத்து வழிபாடுகளை நடாத்தினர். 1962 ம் ஆண்டளவில் ஆலயத்திற்கென காணி பெறப்பட்டது. அங்கு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. குருக்கள் தங்குவதற்கான அறைவீடும் அமைக்கப்பட்டது.

1991 இல் வட்டக்கச்சி தனிப் பங்காகப் பிரிக்கப்பட்டது. இப்பங்கின் கீழ் புனித ஆரோக்கியநாதர் ஆலயம், புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயம், கல்மடு நகர் புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், நாவல்நகர் புனித அந்தோனியார் ஆலயம் ஆகியன துணை ஆலயங்களாக இயங்கிவருகின்றன. நெதர்லாந்திலிருந்து வருகைதந்த குழுவினரின் நிதியுதவியுடன் ஆலய வளாகத்தில் முன்பள்ளி ஒன்று அமைக்கப்பட்டு இன்றும் இயங்கிவருகிறது.

ஆலய வளாகத்தின் மூலைப்பகுதியில் நாற்சந்தியிலிருந்தும் பார்க்கக் கூடியவகையில் திரு மரியநாயகம் அன்ரன் ஜோசேப் என்பவரால் இருதய ஆண்டவர் திருச்சொரூபம் நிறுவப்பட்டது. 1982 இல் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்றுமாத காலத்திற்குள் சிற்ப வேலைகள் முடிந்து திருச்சொரூபம் நிறுவப்பட்டது.

2009 இல் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் ஆலயத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. 2012 இல் அருட்தந்தை அகஸ்ரின் அடிகளாரால் பங்கு மக்களின் உதவியுடன் ஆலயம் புனரமைக்கப்பட்டது. 2023 இல் அருட்தந்தை அஜித் சுலக்சன் அடிகளாரின் காலத்தில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் நிதியுதவியுடன் குருமனையின் சிதைவடைந்த ஓட்டுக் கூரை மாற்றி சீற் போடப்பட்டது. அருட்தந்தை பிராயன் அடிகளார் ஆலய வளவிற்கான சுற்றுமதில் அமைக்கும் பணியை ஆரம்பித்தார். தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அடிகளாரின் மேற்பார்வையில் சுற்றுமதில் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

வருடம்தோறும் மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *