
யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலி வடக்கு வட்டுக்கோட்டையில் 1958.10.22 ஆம் ஆண்டு பிறந்த இவர் அராலி இந்துக்கல்லூரியில் தரம் 08 வரை கல்வி பயின்றவர். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே கலையில் ஆர்வமிக்கவராக விளங்கிய இவர் “ பைந்தமிழுக்களித்தபரிசு” நாடகத்தில் புலவர் பெருந்தலைச்சாத்தனார் பாத்திரம் ஏற்று நடித்து பாராட்டக்களைப்பெற்றவர். இதை விட நகைச்சுவை நாடகங்கள் மற்றும் சமூக நாடகங்களிலும் நடித்தள்ளார்.
பாடசாலை காலத்தின் பின்னர் தனது தாய் மாமன் ஆன கந்தையா அவர்களை குருவாகக் கொண்டு சிந்துநடைக்கூத்தினை முறையாகப் பழகி அவருடன் நடித்தள்ளார்.பின்னர் 1990 காலப்பகுதியில் இடம்பெயர்ந்து பூநகரியில் வசித்து வரும் காலத்தில் அங்கேயே திருமணம் செய்து தொடர்ந்து தனது கலைப்பயணத்தை செய்து வருகின்றார்.
யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் சிந்துநடைக்கூத்திலே பிற்காத்தான்,சின்னான் போன்ற பாத்திரம் ஏற்று நடி;த்தவர்.இது மட்டமல்லாமல் காட்சியமைப்பு,வேடஉடைஒப்பனை என பலபரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் இவரது இக் கலைச்சேவையினை பாராட்டி பூநகரி பிரதேச கலாசாரப்பேரவையினால் 2018 ம் ஆண்டு கலைநகரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்த 2023 ம் ஆண்டு நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழாவில் ககை;கிளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்து இதனை தொடந்து 2024 ம் ஆண்டு தேசிய விருதான கலாபூ~ண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.தொடர்ந்து தனது கலைச்சேவையினை ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply