
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்டுவில்நாடு கிழக்கு கிராமத்தில் 1945.09.12 ஆம் திகதி பிறந்தார். ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளராகிய இவர் 36 வருடங்களுக்கு மேலாகக் கலைத்துறை,சமயத்துறை, ஊடகத்துறை மூன்றிலும் பெரும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றார். 1975 ம் ஆண்டு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர். இவர் 25 இற்கு மேற்பட் நாடகங்களைத் தயாரித்து நெறியாள்கை செய்து பிரதான பாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு “நினைவழியா நினைவுகள்” என்னும் இவரது சிறுகதைத் தொகுதி வெளியீடு செய்யப்பட்டு பாராட்டுக்கள் பெற்றுள்ளார். பத்திரி கைகள்,சஞ்சிகைகள் முதலியவற்றில் இன்றுவரை சிறுகதைகளை எழுதி வருகின்றார். வவுனியாவில் இருந்து வெளிவரும் “மாருதம்” சஞ்சிகையில் தொடர்ந்து சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றார்.கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக 2011 ஆம் ஆண்டு அரச உயர் விருதான கலாபூ~ணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பூநகரி பிரதேசகலாசாரப்பேரவையால் 2012ம் ஆண்டு கலைநகரி விருது வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளார். இத்தகைய கலைத்திறனும் பல்துறைஆற்றலும் கொண்ட இக் கலைஞனின் கலைச்சேவையினை பாராட்டி மாவட்ட கலாசாரப்பேரவையினால் 2012 ம் ஆண்டில் கலைக்கிளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்தும் வருடம் தோறும் பிரதேசக்கலாசாரப்பேரவையினால் வெளியிடப்பட்டு வருகின்ற பிரதேச மலரான பூந்துணர் நறவம் சஞ்சிகைக்கு சிறுகதை ஆக்கங்கனை எழுதிவருகின்றார். இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply