
இவர் 1957.08.31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வேலணை மேற்கு கிராமத்தில் தம்பிராஜா கண்மணிக்குமகனாக பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை மத்திய கல்லூரியில் கற்றார்.
1990இன் ஆரம்ப காலகட்டங்களில் பூநகரி பாடசாலையில் தனது பயிலுநர் ஆசிரியராக தனது பணியினை ஆரம்பித்த இவர் இசைத்துறையில் ஆர்வமிக்கவராக விளங்கினார். பூநகரிப் பிரதேசத்தில் ஜெயபுரம் வடக்க பல்லவராஜன்கட்டில் தனது வாழ்கைத்துணையுடன் வாழ்ந்து வந்தார். கல்வித்துறைக்கு அப்பால் ஒரு சிறப்பான பாடகராகவும் விளங்கியவர்.
கோயில்களில் பஜனைப்பாடல்கள் பாடுதல், மேடைநாடகங்களில் பின்னனிப் பாடல்களையும் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் பூநகரிப் பிரதேச செயலகத்தினால் வெளியிடப்படும் “பூந்துணர்” சஞ்சிகையிலும் பல ஆக்கங்கள், கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். இவரது சேவையைப் பாராட்டி பூநகரிப் பிரதேச செயலக கலாசாரப் பேரவை கலைநகரி விருது வழங்கி கௌரவித்துள்ளது. தொடர்ந்து இக் கலைஞன் தனது கலைச்சேவையினை ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply