
இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேசத்தில் இரணைதீவில் 1951ஆம் ஆண்டு சீமான்செபஸ்தி ஆரோக்கியம் தம்பதியினருக்க மகனாக பிறந்த இவர் தனது 18வது வயதிலிருந்து நாட்டுக் கூத்தின் பால் ஆர்வம் கொண்டு அதனை முறையாகப் பழகி பல மேடைகளில் நடித்துள்ளார். மண்கோபுரம், ஒருதுளி ரத்தம், தாய்மேல் ஆணை, அந்தோனியார் நாட்டுக் கூத்து, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களை நடித்துள்ளார்.
தேவாலய உற்சவங்களின் போது ஞானசவுந்தரி நாட்டுக் கூத்தினை மேடை ஏற்றிவருகின்றார். இரணைமாதாநகரிலும் ஞானசவுந்தரி,திருப்பாடுகளின் காட்சியும் தபக்காலத்தில் பசாம் வாசித்தல் மரணவிடுகளில் ஒப்பாரி பாடுதல்,போன்ற பல்வேறு கலைச்செயற்பாடுகளில் தன்னை முழுமைய ஈடுபடுத்திவருகின்றார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி பூநகரிப் பிரதேச செயலக கலாசாரப் பேரவை கலைநகரி விருது வழங்கி கௌரவித்துள்ளது. தொடர்ந்து இக் கலைஞன் வளர்ந்து வருகின்ற இளங்கலைஞரல்களிற்கு கூத்து தொடர்பான பயிற்சியினை வழங்கி குறுகிய அளவில் நாட்டுக்சுத்தினை மேடைேயுற்றிவருகின்றார். இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply