
இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தில் சித்தன் குறிச்சி கிராமத்தில் காசிப்பிள்ளை பொன்னையா தம்பதியினருக்கு 1953.12.16 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் குலசேகரம் என்னும் நாமம் சூட்டினார்கள்.இவர் கொழும்பு தொழிற்திணைக்களத்தின் எழுது வினைஞராக கடமையாற்றிய காலத்தில் தனது முதல் சிறுகதையை (சாபக்கேடு) என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.இலக்கியத்துறை சார்ந்த செயற்பாட்டாளராகவும் சமூக ஆர்வலராகவும் காணப்படுகின்றார்.
பூநகரி பிரதேச கலாசாரப்பேரவையினால் வெளியிடப்பட்டு வருகின்ற பூந்துணர் சஞ்சிகையில் பல்வேறுபட்ட அறிவியல்,ஆக்கவியல் துறைசார்ந்த கட்டுரைகளினை எழுதி வருகின்றார்.தேசிய கலைஇலக்கிய போட்டிகளில் பங்குபற்றி பிரதேசமட்ட மாவட்டமட்ட பரிசில்களை பெற்றுள்ளார். இவர் ஈடுபட்டுள்ளார்.
இலக்கியத்துறைக்க இவர் வழங்கிய இத்தகைய சேவைகளைப் பாராட்டி பல்துறை ஆளுமை கொண்ட இவருக்கு 2023ம் ஆண்டில் பூநகரி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் கலைநகரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இத்தகைய கலைத்திறனும் பல்துறைஆற்றலும் கொண்ட இக் கலைஞனின் கலைச்சேவையினை பாராட்டி மாவட்ட கலாசாரப்பேரவையினால் 2024 ம் ஆண்டில் கலைக்கிளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பூநகரி பிரதேசத்தில் உள்ள மருத்துவ பழங்களை அடையப்படுத்தி அது தொடர்பான நூல் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply