திரு.மாதர் சுப்பிரமணியம்


இவர் 1949.01.11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் உள்ள பருத்தியடைப்;பு எனும் கிராமத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ஃகரம்பன் சண்முகநாதன் மகாவித்தியாலத்தில் தரம் 08 வரை கல்வியினை மேற்க்கொண்டார்.இவர் சிறுவயதிலிருந்து கலையில்ஆர்வம் உள்ளவர்.பாடசாலைக் காலத்தில் இரண்டு நாடகங்களில் நடித்து மேடையேற்றினார்.

பின்னர் தாமாகவே சில நாடகங்களை எழுதி நடித்துள்ளார்.இவர் எழுதிய நாடகங்களாவன மதுக்கிண்ணம்,தெய்வநீதி,சமர்ப்பணம்,நல்லசூடு, சங்கிலியன்,தாலிமேல்ஆனை,ஒருதரம்சிந்தித்துப்பார் போன்றனவாகும்மேலும் இவர் நடித்த நாடகங்களாவன திருநீலகண்டன்,பண்டாரவன்னியன்,மார்க்கண்டேயன்,தூக்குமேடை,வெற்றவிழிம்பில்,பாகம்,மார்க்கண்டேயர்,தீயின்போர் என்பனவாகும்.

இப் பிரதேசத்தில் நடிகரும் நாடகஎழுத்தாளருமாகிய ;.இவரது கலைச்சேவையினை பாராட்டி 2016ம் ஆண்டு பூநகரி கலாசாரப்பேரவையினால் கலைநகரி எனும் விருது வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *