
நாச்சிக்குடாவை வதிவிடமாக கொண்ட இவர் சிறுவயதிலிருந்து கலையில் ஆர்வம் உள்ளவர் சிறந்த நடிகரும் நாடக எழுத்தாளருமாவார். இவர் பல நாடகங்ளை எழுதி நடித்துள்ளார் இவரால் உருவாக்கப்பட்ட நாடகங்களாவன, மாமாறுக்மணி, அமுதவள்ளி, பண்டாரவன்னியன், இனி எங்கே ஓடுவது. சீதனப்பேய், அப்பு தந்த சீதனம் என்பனவாகும். இது மட்டுமல்லாமல் பல்வேறுபட்ட நாடகங்களை நடித்துள்ளார்.
அவையாவன ஜேனோவா, மாமாறுக்மணி, மயானத்தில் ஓர் இரவு, சீதனக் கொடுமை சமூகப் பேய், பாரதி பூமிக்கு வந்தால் இரண்டாம் தாரம், மரபாஸ், பண்டாரவன்னியன், ஊதாரிப்பிள்ளை, நல்லதங்காள், இனி எங்கே ஓடுவது, உமலோகத்தில் ஓர் நாள். கண்ணிவயல், பார்வைகள், புதியபாதை. விடியும் திசையும், மாற்றம் இதுவும் விதியா, இறுதி அமைப்பு, அன்னைநிலம், சுமைதாங்கி சுமையானது, மனவிலங்கு. சுகவாழ்வு, இனிநீதி செய்வோம், விலை.
இவர் சிறந்த அரங்கவெளிஆற்றுகைக் கலைஞன், நாடக எழுத்தாளர். நாடக நடிகன் நாடக இயக்குனர் என்ற பல பரிமானங்களுக்குச் சொந்தக்காரனாவார்.
இப்பிரதேசத்தின் நடிகரும். நாடக எழுத்தாளருமாகிய இவருடைய சேவையை பாராட்டி பூநகரி கலாசார பேரவை 2017ம் ஆணடு “கலைநகரி” விருது வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply