திருமதி லிங்காஐினி ஜீவரூபன்


கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம் எனும் கிராமத்தில் பரமசிவன் செல்வலக்ஸ்மி எனும் தம்பதியினருக்கு இரண்டாவது புதல்வியாக 1986ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ம் திகதி பிறந்த திருமதி லிங்காயினி ஜீவரூபன் ஆகிய இக் கலைஞன் சிறு வயதில் இருந்தே ஆடல் பாடல்களில் மிகுந்த ஆர்வம் காட்டி பல மேடைகளில் தனியாகவும் குழுவாகவும் இணைந்தும் ஆடியுள்ளார். நாட்டின் யுத்தநிலைமை காரணமாக இடம் பெயர்ந்து தமிழ் நாடு சென்று அங்கும் பல மேடைகளில் நடனம் ஆடியுள்ளார்.


1995ம் ஆண்டு திருமதி சூரியயாழினி விரசிங்கம் எனும் குருவிடம் முதல் முறையாக முறைப்படி நடனத்தினை கற்க தொடங்கினார். 1996ம் ஆண்டு தொடக்கம் பற்பல மேடைகளில் தனி, குழு என பல நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் பங்கு பற்றி முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்டார். பரதம், கிராமிய நடனங்கள், கூத்து, நாட்டிய நாடகம், மேலைத்தேய நடனங்கள், கண்டிய நடனங்கள் என பலவைகயான நடனங்களை ஆடி பல சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.


பல்கலைக் கல்வியை தொடர்கையில் பல நிகழ்வுகள், போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை பல வகையான நடனங்களை சுய முயற்சியில் நெறியாள்கை செய்துள்ளார். 2020ம் ஆண்டு தனது சொந்த ஊரான ஜெயபுரம் மகா வித்தியாலயத்திற்க்கு வந்து பாடசாலையில் நடனத்துறையை வளர்த்தெடுத்தல், பல நடன நிகழ்வுகளில் பங்கேற்றல், பல நடன நிகழ்வுகளை நெறியாள்கை செய்தல் என பல செயற்பாடுகளில் ஈடுபடல், நடன செயலமர்வு, யோகாசன பயிற்சி முதலானவற்ைில் கலந்துகொள்ளல். தனது பிரதேசத்தில் நடனத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களை இனக்கண்டு 2021 அவர்களின் திறன்களை வளர்க்கும் நோக்குடன் தனது ஊரில் “பரம செல்வ நர்த்தனாலயம் ” எனும் நடன கலை மன்றத்தை தனது சுய முயற்சியில் உருவாக்கி வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் மன்றத்தை பதிவு செய்து எந்த வித எதிர்பார்ப்புக்களும் இன்றி 50 க்கு மேற்பட்ட மாணவர்களுத்கு இலவச நடன வகுப்பை இன்று வரை நடாத்தி வருகின்றார். இம் மன்றத்தினூடாக எச் சந்தர்பத்திலும் எந்த இடத்திற்கும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்ைி நடன நிகழ்வுகளை ஆற்றுகை செய்தும் வருகிறார்.


2022 இல் தஞ்சாவூர் தமிழ் பலகலைக்கழகத்தினால் பரத முதுகலை சிறப்பு நிலை தேர்வு பட்டத்தை பெற்றுக் கொண்டேன்.
2023 இல் யாழ் பல்கடலக்கழகத்தில் கல்வியல் மானி பட்டத்தைப் பெற்றுக்கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *