
பெயர் -இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட முழங்காவில் பிரதேசத்தில் அன்புபுரம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் புனிதவதி தம்பதியினருக்கு 1984.12.03 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் பாலேந்திரன்;; என்னும் நாமம் சூட்டினார்கள்.
நாடகம், இசை என பலதுறைகளில் பாலேந்திரன் அறியப்பட்டிருந்தாலும் கூட இசைத்துறை சார்ந்த அவருடைய பயணம் பூநகரி மற்றும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நன்கு அறியப்பட்டதாக உள்ளது. 1993 ஆம் ஆண்டு தன்னுடைய 9 ஆவது வயதில் பாடசாலையில் மேடையேறி பாடிய அனுபவத்தை பகிரும் இவர் 2000 ஆம் ஆண்டளவில் மாவட்ட, மாகாண ரீதியான பல பாடல் போட்டிகளில் பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றுள்ளார். -சரண் இசைக்குழு எனும் இசைக்குழுவை உருவாக்கி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இசைக்கச்சேரிகளை ஆற்றி வருவதுடன் தபேலா, மிருதங்கம். டொல்கி ஆகியவற்றை நன்கு இலவசமாக கையாளக்கூடிய திறமை உள்ளவராக இவர் காணப்பட்டதுடன் இவற்றை புதிய தலைமுறை மாணவர்களுக்கு கற்பித்தும் வருகின்றார். 2000 ஆம் ஆண்டு முயுசுழுனு நிறுவனத்தால் நடத்தப்பட்ட பாடல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய கலைத்துறை மீதான ஆர்வம் மற்றும் இசைத்துறை சார்ந்த செயற்பாடுகளுக்காக பூநகரி பிரதேச செயலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஆகியவற்றின் “இளங்கலைஞர்” விருதை பெற்றுள்ளார். பிரதேச சபையால் நடத்தப்பட்ட போட்டியில் (2024) “உலகத்தை வென்றவர் வாசித்த மக்கள் எனும் பாடலை இயற்றி இசையமைத்து பாடியமைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இக் கலைஞர் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply