
இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேசத்தில் தெளிகரை கிராமத்தில குருசுமுத்;து மரியம்மா தம்பதியினருக்கு 1958.02.11 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் தேவதாஸ் என்னும் நாமம் சூட்டினார்கள்.
இவர் நாடக நடிகராகவும் கார்மோனிய கலைஞராகவும் மிருதங்க வித்துவானாகவும் செயற்பட்டு தனக்கான அடையாளத்தை உருவாக்கிய ஓர் கலைஞர். இவருடைய தந்தை ஓர் மிருதங்க கார்மோனிய வித்துவானாக செயற்பட்டவர் என்பதால் தந்தையை முன்மாதிரியாக கொண்டு இசைத்துறை மீதான ஆர்வத்தை இவர் வளர்த்துக்கொண்டார். அரிச்சந்திர மயான காண்டம் இசை நாடகத்தில் பங்குபற்றி நாடக அனுபவத்தை பெற்றுக்கொண்டவர். பூநகரிக்கு வருகை தந்த நாடக நெறியாளர் திரவியநாதனிடம் கற்று தனது நாடகத் திறனை வளர்த்துக்கொண்டவராக தன்னை அடையாளப்படுத்துகின்றார் தேவதாஸ்.
பூநகரியின் பல பகுதிகளில் நாடக ஆசானாக பல நாடகங்களை பழக்கி மேடையேற்றினார். கிட்டத்தட்ட 20 க்கும் அதிகமான நாடகங்களில் நடித்து மேடையேறிய தேவதாஸ் அவர்கள் “பார்மகனே பார்”. “சிமிட்டும் சிலைகள் ஆகிய நாடகங்களை எழுதி மேடையேற்றிய சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார். குறித்த நாடகப்பிரதிகள் இடப்பெயர்வுடன் காணாமல் போனதையும் கவலையுடன் பதிவு செய்கின்றார். அத்தோடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பாலா மாஸ்ரரின் நாடகங்களான இரத்த நதியில் பூத்த வெள்ளை ரோஜா, சிந்திக்க தொடங்கி விட்டார்கள், இன்னும் வேறு நாடகங்களிற்கும் இசை அமைத்தார்.
கலைத்துறை மீதான இவருடைய ஆர்வத்தையும் – கலைத்துறைக்கான இவருடைய பணிகளையும் பாராட்டி பூநகரி கலாசார பண்பாட்டு பேரவையானது “கலைநகரி” விருதினை இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. இக் கலைஞர் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply